சிறப்பு கட்டுரை தொகுப்பு–தோழர்.தமிழரசன் பிறந்தநாள் (14.4.1945)!

தமிழ் தேச விடுதலைக்கு தன்னை ஈந்து,தமிழ் தேச தலைவராக வாழ்கின்றார் தமிழரசன். தமிழ் தேச விடுதலையும்,சாதி ஒழிப்பும், பொதுமை தேசமும் உருவாக்க தன்னையே அர்ப்பணித்து கொண்ட தலைவர்.மக்களை அதிகமாக நேசித்த தலைவர்! -தோழர்.தமிழ் நேயன்(தமிழ் தேச மக்கள் கட்சி) —————————————————————————- தமிழக உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு, தமிழ் நாடு விடுதலைப்படை எனும் அமைப்பை உருவாக்கி, விடுதலைக்கான அறிவியல் வழியிலான திட்டத்தையும் சமரசமற்ற போராட்டத்தையும் முன்னிறுத்திய புரட்சியாளர் தோழர் தமிழரசன். -வழக்கறிஞர்.செயப்பிரகாசு நாராயணன்(தமிழர் முன்னணி) —————————————————————————— தமிழ் …

தோழர் தமிழரசன்-மக்களை ஆழமாக நேசிக்கக் கூடியவர்

தோழர் தமிழரசன்-மக்களை ஆழமாக நேசிக்கக் கூடியவர்!!! ——————————————————————— மீன்சுருட்டி அருகே இருக்கும் பகுதிகளில் ஒடுக்கப்படும் மக்களுக்காக தன்னால் ஆன சிறு உதவிகளை செய்து வந்தவர் சதாசிவம் அவர்கள்.. அவரின் நல்லெண்ணம் அறிந்த தலைவர் தமிழரசன் அவரைச் சந்திக்க சென்றார்.இருவரும் பல நாட்கள் பேசினர் .இறுதியாக சதாசிவம் அவர்கள் சிறு சிறு மாற்றங்களின் மூலம் விடுதலையை வென்றெடுக்க முடியாது எனப் புரிந்து கொண்டார்..சாதி ஒழிப்பு தான் இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையான காரியம்,அதனுடாக தரகு ஒன்றிய இந்தியத்திலிருந்து தமிழ்த் தேச …

தமிழரசன் குறித்த கட்டுரைத் தொகுப்புகள் !!!

http://www.kalakam.in/2014/01/blog-post_30.html யார் இந்த தமிழரசன்? தமிழ் தேசிய தலைவன் தமிழரசன் குறித்தான செய்திகள் முழுக்க மறக்கடிக்கப்பட்ட இந்த தமிழ் தேசத்தில் நமக்கு கிடைக்க கூடிய சில செய்திகளை பகிர்வது அவசியம் எனக் கருதுகிறோம்..ஆகவே தோழர் பாலன்,தமிழரசன் கலை,மு.ரா.பேரறிவாளன், விடுதலைக் குரல்,யாழ் பக்கங்களில் இருந்தும் மற்றும் இணையச் செய்திகள்,கேட்டறிந்தவை என எல்லாவற்றையும் தொகுத்து கொண்டு வர முயல்கிறது கலகம்..இதோ . தோழர் தமிழரசன் … மக்கள் புரட்சியை விரும்பியவர்..மக்களோடு வாழ்ந்தவர்..முந்திரிக்காடுகளில் விளையும் அனைத்து முந்திரிகளையும் பெரும் முதலாளிகள் சுரண்டி …

சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்

சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் *சாதியை ஒழிப்பது, தமிழ்த்தேச விடுதலைக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை வீழ்த்தவும் உடனடி அவசியம். ************************************************************************************** இந்தியா எனப்படுவது தேசிய இனங்களின் சிறைக்கூடம் மட்டுமல்ல சேரிகள் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சக்கணக்கான சிறைக்கூடங்களும் உடையதாகும். ஆடுமாடுகளைப் பட்டியலில் அடைப்பதைவிடக் கேவலமான முறையில் தீண்டத்தகாதவர்களென்ற பெயரில், ஐந்திலொரு பங்கு மக்களை தூரத்துச் சேரிகளில் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் சனநாயக நாடே இந்தியா. மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை உலகத்திற்கே அறிமுகப்படுத்தியவர்கள் ஏகாதிபத்தியங்களல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே …

தோழரின் துப்பாக்கி ஏன் மெளனித்தது…?

தோழரின் துப்பாக்கி ஏன் மெளனித்தது…?               “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை”. தனக்கு மிகவும் பிடித்த குறள் இது . . .  அந்த உலோகம் . . .அந்த உலோகத்தினால் உருவாக்கப்பட்ட ஆயுதம் அடிக்கடி இப்படிப் பெருமைப்பட்டுக் கொள்ளும். நவீன காலத்தைச் சேர்ந்தவனாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்தோன்றி மண் தோன்றாத காலத்து முன்தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் கூறும் நல்லுலகம் தனது வருகையைப், பெருமையைப் முன்கூட்டியே …

தோழர் மாறனை நினைவு கூருவோம்!

தோழர் மாறனை நினைவு கூருவோம்! தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார். இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார். 1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் …