தமிழகத்தில் ஆந்திர தொழில், கல்வி நிறுவனங்களே இருக்காது-பண்ருட்டி வேல்முருகன் எச்சரிக்கை!

சென்னை: பாலாற்றில் தடுப்பணை உயரத்தை உயர்த்துவதற்கும், தமிழகத்துக்குச் சொந்தமான கோவிலை கைப்பற்றுவதற்கும் ஆந்திர அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலை நீடித்தால், தமிழகத்தில் ஆந்திர தொழில், கல்வி நிறுவனங்களே இருக்காது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்த்து போராடி வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழக …

ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்!-பெ.மணியரசன்

=========================================================== பாலாற்றுத் தடுப்பணையை உயர்த்துவதைத் தடுக்க ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்! ============================================================== தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை! ============================================================= வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள புல்லூரில், பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே உள்ள 5 அடி உயர தடுப்பணையை, 12 அடியாக உயர்த்திட ஆந்திர அரசு கட்டுமானப் பணிகள் நடத்துவதையும், புல்லூர் கரையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கனக நாச்சியார் அம்மன் கோவிலை அபகரிக்க – …

ஆந்திரத்தில் பாலாற்று தடுப்பணை உயரத்தை அதிகரிப்பதா?- ராமதாஸ் கண்டனம்

புல்லூர் தடுப்பணை உயரத்தை அதிகரித்து, பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தும் பணிகளை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசனம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது …