கேரள அரசு,மலையாளிகளை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்!

“பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையென்றால், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்டங்களில் வாழும் மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரக்கூடாது என்ற முடிவோடு, பவானி ஆற்றில் கேரள அரசு கட்டி ஆறு தடுப்பணைகள் கட்டி வருகிறது. கேரள மாநிலம் – தேக்குவட்டையில் கட்டப்பட்டு வந்த தடுப்பணையை, 17.02.2017 …

சஞ்சய் தத் விடுதலை விவரம்: பேரறிவாளன் கோரிய ஆர்டிஐ!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஆர்டிஐ மனு ஒன்றில் நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்பாகவே விடுதலை செய்யப்பட்டதன் காரணம் குறித்து கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 3-வது நபர் ஒருவரின் விடுதலை விவரங்களை கோர முடியாது என்ற அடிப்படையில் மனுவை தகவல் அலுவலர் / சிறை அதிகாரி நிராகரித்தார். ஏற்கெனவே இதே தகவலைக் கோரியிருந்த போது, எரவாடா சிறை அதிகாரிகள், மனுவுடன் அனுப்பப்பட்டிருந்த …