செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 83 தமிழர்கள் கைது!!

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 செம்மரங்கள், 4 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது ஆந்திர போலீஸ். கைதான தமிழர்கள் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இன்னும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது!!!

ஐதராபாத் : ஆந்திராவின் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு செம்மரம் வெட்டுவதற்கு தமிழர்கள் வருவதாக அம்மாநில செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திரப் போலீசார் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். அப்போது சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்கு வந்ததாக 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கைதான 32 பேரும் திருவண்ணாமலையை …