கீழடியில் தமிழன் காலடி!!

2500 ஆண்டுகளுக்கு முன் தமிழன் நாகரிகத்தின்  உச்சியில் இருந்தான் என்பதற்கான வரலாற்று சாட்சி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் கிடைத்துள்ளது. நம் மூதாதையர் வாழ்ந்த பூமியில் என் காலடி பதிக்க வேண்டும், அவன் வாழ்ந்த சிறப்பை காணவேண்டும் என்று ஆவலில் மதுரைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டேன். கீழடி சிவகங்கை மாவட்டம் என்றாலும் மதுரையில் இருந்து ௧௨ (12)கி.மீ தொலைவில் தான் உள்ளது. மதுரை காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் கடந்தால் மதுரை -இராமேசுவரம், திருச்சி-திருநெல்வேலி சாலை …

மதுரை கீழடியில் புதைந்து இருக்கும் தமிழர் தொல்லியல்!

இன்னும் ஒரு சில நாட்களில் இரண்டு லாரிகள் மதுரையிலிருந்து மைசூருக்குப் புறப்படவிருக்கின்றன. அந்த லாரிகள் தமிழகப் பதிவெண்களைக் கொண்டவையா? அல்லது கர்நாடகப் பதிவெண்களைக் கொண்டவையா என்பது இனிமேல்தான் தெரியவரும். ஒருவேளை, காவிரிப் பிரச்சினையை ஒட்டி, கர்நாடகத்தில் அந்த லாரிகள் தாக்கப்பட்டால், அரசுக்குப் பெரும் நட்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அந்த லாரிகளில் இருப்பதெல்லாம் பழம்பொருட்கள்தான். அதுவும் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பொருட்கள்! மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் இதுவரை 5,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த …