மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுக்காப்பைக் குறித்து கஸ்தூரி ரங்கன், கார்கில் தலைமையில் குழு அமைக்கப்பட்டன. குஜராத்தில் 449 சதுர கி.மீட்டரும், மகாராஷ்டராவில் 17,340 சதுர.கி.மீட்டரும், கோவாவில் 1461 சதுர கி.மீட்டரும், கர்நாடகத்தில் 20,668 சதுர.கி.மீட்டரும், கேரளாவில் 9993 சதுர கி.மீட்டரும், தமிழகத்தில் 6914 சதுர கி.மீட்டரும் மேற்தொடர்ச்சி மலை பசுமைப் பாதுகாப்பில் அடங்கிய பகுதி என கண்டறியப்பட்டன. ஆனால், தமிழக அரசு இதைக் குறித்தான தனது கருத்தை இதுவரை மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கின்றது. 2015 …

உண்மை சொல்லும் வாய்மொழி வரலாறு..

பாகம்பிரியாள் இராமநாதபுரம் ராஜா கிழவன் சேதுபதிக்கு சிவகங்கை மன்னர் அன்பின் மிகுதியால் கொடுத்த கோவில் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை தாலுகாவில் திருவொற்றியூர் பகுதியில் இருக்கும் பாகம்பிரியாள் ஆலயம். மாவலிச் சக்கரவர்த்தி வந்துபோனதாக வேதம் போதிப்போர் வெட்டியாய்ப் பேசினாலும் வில்வமரங்கள் நிறைந்த இந்தக் கோவில் ஓர் சிவத்தலம் அதாவது தென்னாடுடைய சிவனே போற்றி என சிவகங்கை சமஸ்தானம் வணங்கிய கோவில். ”சேதுபதி மன்னனுக்கு மொய் செஞ்ச சிவகங்கை கோயிலையேப் பரிசாக கொடுத்து வந்த மன்னவரு செம்மண் …

அரியலூர் தலித்பெண் நந்தினியின் கோரப்படுகொலை !

டெல்லிப்பெண் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூத்தில் கொஞ்சமும் குறையாது இந்த கொடூரப்படுகொலை. வன்கொடுமை,கூட்டு பாலியல் வல்லுறவு, கோரக்கொலை என அனைத்து கொடூரங்களையும் கொலையாளிகள் செய்துள்ளனர். ஊடகங்கள் அதிகம் பேசாத,கண்டுகொள்ளாத இந்த கொடூரச்செயலை வெகுமக்களின் பார்வைக்கு வெளிகொணர வேண்டும். உண்மையை வெளிக்கொண்டுவருவதும்,நிகழ்ந்த கொடூரத்திற்கு நீதி கிடைக்கவும்,குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கச்செய்வதும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரின் கடைமையும் ஆகும். ‘உண்மையில் அரியலூர் நந்தினிக்கு என்ன நடந்தது ?’ அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- ராஜகிரி ஆகியோரின் …

பீச்சாக்கடைல முங்கி …

பீச்சாக்கடைல முங்கி கருப்புத்தோட்டி கழுவுற கருமாந்திரத்த நிறுத்தனுனா எதேதுக்கோ கருவிசெய்யுற படிச்சவுக யாராச்சு இதுக்கும் எசவா எதாச்சு பண்ணனு. செகப்புதான் ஒசத்தின்னு நெனைக்குற மந்தக்கூட்டத்த தோலு நெறத்துக்கும் மூள அறிவுக்கும் என்ன ஒறவுன்னுகேட்டு செவுல்யே ஓங்கிஅப்பனு. பலசாமி பேரச்சொல்லி பாகுபாட்ட உண்டாக்கி கொலங்கோத்திரன்னு பட்டநாமக்காரவய்ங்க குட்டயகொழப்பாம இருக்க கொலசாமி கும்பிடுற நாட்டார்தெய்வ வழிபாட்ட கூட்டச்சேந்து மீட்டெடுக்கணும் சமஸ்கிருதச்சாமிக்கு சக்கிலயத்தமிழ காதுலஓத பறச்சி பாப்பாத்தி வந்து கருவறைக்குள்ள பணிவெட செய்யணு பேதத்த ஒழிக்கணுனா மொதல்ல வேதத்த கொளுத்தனு பண்ண …

தீபாவளி சிறுகதை – இயக்குநர் வ.கெளதமன்!

பாண்டு மாமாவின் குரல். நடந்து முடிந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தால், காலம் பல விதமானச் சோதனைகளை ஒரு விளையாட்டாக நடத்திப்பார்த்துவிட்டுத்தான் சென்றிருக்கிறது நம்மைவிட்டு. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்போதைய கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகில் உள்ள எடைச்செருவாய் கிராமத்தின் இறுதியிலும் பாளையம் கிராமத்தின் தொடக்கத்திலும் உள்ள பதினைந்துப் பதினாறு வீடுகளைக் கொண்ட ஒரு சின்னப்பகுதி. சாலை முழுக்க இரண்டு பக்கங்களிலும் பெரும், பெரும் புளியமரங்கள். கோடையில் கொட்டிய இலைகலெல்லாம் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் கிளிப்பச்சை நிறத்தில் …

மறுதிருமணம் மகா குற்றமா என்ன?!

மணமுறிவும்,மறு திருமணமும்-தனி மனித வாழ்வில் மிக சாதாரணமான இயல்பான நிகழ்வு! முதல் மனைவியிடம் மண முறிவு பெற்றுள்ளார்.இரண்டாவது மனைவி இறந்துவிடுகிறார்.தற்போது மறுதிருமணம் செய்திருக்கிறார்.இதை வைத்துக் கொண்டு ஒரு தனி மனிதனை எப்படி விமர்சனம் செய்ய இயலும்?என்ன தேவை இருக்கிறது?இதன் ஊடாக “தன்னை யோக்கியனாக” காட்டும் மனநிலை எவ்வளவு மட்டமானது?எவ்வளவு வக்கிரத்தன்மையுடையது? அதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும்,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு.அன்வர் ராஜா அவர்கள் தற்போது மூன்றாவது திருமணம் செய்திருக்கிறார்.இதில் இவருடைய மதத்தை கேள்விக்குள்ளாக்குவதில் என்ன அறம் …

70 ஆண்டு நாகை திரு.வி.க நூலகம்!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்துக்குட்பட்ட மேலப்பாதியில் அமைந்துள்ள திருவிக நூலகம் பற்றி, முனைவர் மு.இளங்கோவன் எழுதியுள்ள குறிப்பு. அவ்ருடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட இக்குறிப்பு, நூலகர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் போன்றோரால் தமிழ்ச்சமூகம் பெருமை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.   மு.இளங்கோவன் எழுதிய குறிப்பில்…. திரு. வி. க. நூல் நிலையம் பற்றி நான் ஆய்வு மாணவனாக இருந்த நாள்முதல் அறிவேன்.அந்த நூல் நிலையத்தின் சிறப்பைப் பாராட்டி நான் எழுதிய மடல்களும், அந்த மடல்களுக்கு நூல் நிலையத்தின் நிறுவுநர் திரு. …

இந்தியா உடையும்-அருந்ததி ராய்!

இந்தியா உடையும் – அருந்ததி ராய் “அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார்.” – சமஸ் ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’ ‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து …

கல்விப் போராளி மேரியம்மா !!

கல்விப் போராளி மேரியம்மா !! மொழியால்,இனத்தால்,சாதியால்,பாலினத்தால் சர்வதேசமெங்கும் தங்கள் பலம், பலவீனதிற்க்கேற்ப்ப இந்த பிரிவினைகள் மனிதர்களை,வலிமை குன்றியவர்களை ஒடுக்கியே வருகிறது….ஒவ்வொரு பேதங்களும் ஒவ்வொரு வகையில் வலி தந்தாலும், பட்டென பார்வையில் படுவதால் நிறபேதம் ஒடுக்குமுறையில் உச்சத்தை தொட்டே வந்துள்ளன. 19 நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில், அமெரிக்க நாட்டில் நிறபேதம் தலைவிரித்தாடிய ஒன்று…. எந்த வழியிலும் ஏற்றம் பெற முடியா ஒரு அடிமை நிலையிலேயே கறுப்பின மக்கள் வாழ்ந்து வர அடிமை சங்கிலிகளை உடைத்தெறிய மால்கம் எக்ஸ்,மார்டின் லூதர் …

கடாபியின் இன்னொரு முகம்!

கடாபியின் இன்னொரு முகம்…… 1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது. 3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் . 4.அந்த நாட்டில் மனம் …