தமிழகத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் !

தமிழ்நாட்டில் பருவ மழை பொய்த்து போனது, இதனால் விவசாயிகள் தர்கொலை செய்து கொண்டது, தற்போது நிலத்தடி நீர் மட்டம் வற்றி போனது, போதாதற்கு கேரளா மற்றும் கர்நாடகா அரசு தங்கள் பகுதிகளில் அணையைக் கட்டி தமிழகத்து வர வேண்டிய அல்லது கிடைக்க வேண்டிய நீர் வளத்தை தடுத்து கொண்டிருப்பதால் நொந்து போயிருக்கும் நம்மூர் விவசாயி களுக்கு இன்னுமொரு பிரச்னை உருவாகி இருக்கிறது. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுக்கும் திட்டத்திற்கு …

இந்திய நீதிமன்றத்தின் நியாயம்

•சந்தண வீரப்பன் படத்திற்கு ஒரு நியாயம். இசைப்பிரியா படத்திற்கு இன்னொரு நியாயம் இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா கடந்த வருடம் சந்தன வீரப்பன் பற்றிய ஒரு படம் வந்தது. அப்போது வீரப்பன் மனைவி முத்துலட்சுமி படத்திற்கு தடை கோரினார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தை பார்த்துவிட்டு வழக்கை தொடரும்படி முத்துலட்சுமிக்கு ஆலோசனை கூறியது. படத்தை பார்வையிட்ட முத்துலட்சுமி சில திருத்தங்கள் கூறினார். அது படத்தின் இயக்குனரினால் எற்கப்பட்டது. அதனால் முத்துலட்சுமி தனது தடை கோரும் மனுவை …

சென்னையில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத தாய்-மகள் மீது வழக்கு!

சென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நிற்காத மூவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தற்போது சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றை நடத்திவருகிறது. ஜனவரி 5 முதல் 12ஆம் தேதிவரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன. விஜயா ஃபோரம் மால் என்ற ஷாப்பிங் மாலில் உள்ள பாலஸோ திரையரங்கில் இன்று நன்பகல் 12 …

சென்னையில் மார்கழி மாதத்தில் வீதி விருது விழா…!

9/1/2016 ‘சென்னையில் மார்கழி மாதத்தில் திருவையாறு’ என தமிழர்களை புறக்கணித்து “ஒரு கலை விழா (பாட்டுக்கச்சேரி )” எனும் பெயரில் தமிழர்களை புறக்கணிக்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.தமிழ் மண்ணிற்க்கான கலைகளை கலைஞர்களை கொண்டாடும் திருவிழாவாக மாற்று ஊடக நடுவம் ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கொண்டாடியது.தொடர்ந்து 4 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வீதி விருது  விழா நேரத்தில் 3000 கலைஞர்கள் பங்கெடுக்கிறார்கள். புதிய நாட்டுப்புற கலைகளை மேடையேற்றுவதும் ஒவ்வொரு முறையும் 100 மூத்த …

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் இழப்பீடு – சீமான்!

விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கடன்களையும் அரசே ஏற்க வேண்டும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் —————————————— இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழர்களின் பாரம்பரிய உரிமையான காவிரி நதிநீர் உரிமையானது கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆளும் மோடி அரசின் நயவஞ்சகத்தாலும் மறுக்கப்பட்டதன் விளைவாக பாசனத்திற்கு நீரின்றி தான் விளைவித்த நெற்பயிர்கள் கண்முன்னே கருகக்கண்டு ஆழ்ந்த மனத்துயருற்ற …

திருச்சி தமிழீழ ஏதிலியர் பட்டினி போராட்டம்!

•இம்முறையாவது தமிழ்நாடு அரசு இந்த அகதிகளுக்கு இரக்கம் காட்டாதா? திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ தமிழ் அகதிகள் தமது விடுதலைகோரி 23.12.2016 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். ஓவ்வொரு முறையும் விடுதலை செய்வதாக வாக்குறுதியளிக்கும் அதிகாரிகள் பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றி வருகின்றனர். இம்முறையாவது இந்த அகதிகள்மீது இரக்கம் காட்டி அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். 1990ம் ஆண்டு முதல் இயங்கி வரும் சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ …

கனவாகிப் போன கச்சத்தீவு!

  கச்சத்தீவில் கடந்த 7, 8ம் தேதி புதிய அந்தோணியார் கோவில் திறப்பு விழா நடக்க இருந்தது. இராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ள இந்த தீவிற்கு தமிழக மீனவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டபொழுது, இலங்கையிலிருந்து சரியான அழைப்புகள் வராதது தமிழக மீனவர்களை புண்படுத்தியது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜோசப் ஜெப ரத்தினம், மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆகியோர் இந்த …

மத்திய இந்திய அரசிற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் !

புதுடெல்லி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் என்ற கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜியை ஊழல்களின் சாம்பியன் என பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது.  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரி இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி …

பச்சைத் தமிழகம் கட்சி பத்திரிகைச் செய்தி

  ஊழலை எதிர்ப்பது உரிமையை விடுவதாகாது! மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியை கைது செய்திருப்பதையும், அந்த சமூக விரோதிக்கு துணை போன தலைமைச் செயலாளர் வீட்டில், அலுவலகங்களில் தேடுதல் வேட்டை நடத்தியிருப்பதையும் வரவேற்போம். மிக நீண்ட காலமாக தமிழர்களின் வளங்களும், வாழ்வாதாரங்களும் ஊழல் அரசியல்வாதிகளால், அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளால் திருடப்பட்டு வருகின்றன. இன்று பாரத ரத்னாவாக அறிவிக்கப்பட வேண்டும் என்பவரின் ஆட்சியில் ஊழலும், ஊதாரித்தனமும் தலைவிரித்தாடின. தேர்தலில்கூட ஊழல் செய்தார்கள். சட்டமன்றத்தையே திருடிக்கொண்டார்கள். யார் காலில் …

தேசியம் பற்றி கவிஞர் இன்குலாபு

ஈழ விடுதலைப் போராட்டம்/ தமிழ்தேசியம் குறித்த ஐயாவின் உரையாடலின் ஒரு பகுதி: கேள்வி : ஈழப்பிரச்னை தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களின் அறிவுஜீவிகள் மத்தியில் கவனம் பெறாமல் போனதற்கான காரணம் என்ன? பதில் : ஒதுங்கியிருத்தல் என்னும் நோய் தமிழக ஆசிரியர்களைப்போலவே இந்தியத்துணைக் கண்டத்து அறிவுப்புலத்தையும் பாதிச்சிருக்கு அப்படின்னு நான் நினைக்கிறேன். இரண்டாவது ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப்போராட்டத்தை அவர்களில் பலர் புரிந்துகொள்ளவில்லை. தேசியம் என்பது ஒரு கற்பிதம். அதற்காகப் போராடுவது குறுகிய நலம் சார்ந்தது அப்படின்னு …