தைப் புரட்சி-காணொளிப் பதிவுகள்

அகழி யூடுபில் YOU TUBE ஆவணப்படுத்தியுள்ளோம்! கூடுதல் தகவல்கள் அல்லது காணொளிகள் இருப்பின் அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.    

தமிழன் ! ஒற்றை அடையாளம்

இத்தகைய ஒற்றுமைக் காட்சியை வேறு எந்த போராட்டக் களத்திலாவது கண்டதுண்டா? சாதி, மதங்களை கடந்து ஒன்று திரளும் தமிழ் இனம்! முதலில் சாதியை சொல்லி தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அனைத்து சாதி மக்களும் ஒன்று திரண்டார்கள். பின்னர் மத வேறுபாட்டை தூண்டப் பார்த்தார்கள். ஆனால் மக்கள் அதற்கும் இடம் கொடுக்காமல் போராடுகிறார்கள். இஸ்லாமிய தமிழரும் போராட்டத்தில் ஒன்று கலப்பதை பொறுக்க முடியாத இந்து வெறியன் எச். ராஜா வேண்டுமென்றே வதந்தி பரப்பினான். ஆனால் தமிழ் மக்கள் அதற்கு …

நாங்க சும்மா கூடிய கூட்டம் கிடையாது – தமிழர்கள்

நீங்க பண்ற எல்லா தப்புக்கும் இதுவே எச்சரிக்கையா இருக்கும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சாதி, மதம் இல்லாமல், ஆண் பெண் பாரபட்சம் பார்க்காமல் இங்கு வந்து உட்கார்ந்து இருக்கோம் என்றால் … விவசாயிகள் போராட்டம் தொடரும், மாணவர் போராட்டம் தொடரும். லட்சத்தில் ஆரம்பித்து கோடியில் போய் முடியும். நாங்க சும்மா கூடிய கூட்டம் கிடையாது – தமிழர்கள். தமிழ் மக்கள் என்றால் என்னவென்று நாங்கள் காட்டுவோம். எங்கள் மொத்த புரட்சியும் உங்களுக்கு காட்டுவோம். ஒவ்வொரு நாட்டிலும் தமிழர் …

ஜல்லிக்கட்டு ஏன்? ஒரு அறிவியல் பார்வை

‘ஜல்லிக்கட்டு’ இன்று உலகெங்கும் வாழும் நமது தமிழர்களினால் முழங்கப்பட்டுவரும் ஒரு வீரச்சொல் ஆகும். இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால், இதை இந்தியாவில் தடைசெய்யப்பட்டதே ஆகும். ஆனால் சும்மா ஒரு விளையாட்டைத் தடை செய்வதற்கு ஏன் நமது தமிழ் மக்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாகத் திரண்டு போராட்டங்களைச் செய்கிறார்கள் என்பதை வெளிநாட்டவர்கள் மட்டுமில்லை, நம்மில் சில தமிழர்களும் கூடக் கேட்பார்கள். அப்படி இந்த ஜல்லிக்கட்டுக்கு ஏன் இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? நான் இலங்கையில் பிறந்து, ஜெர்மனியில் வாழ்ந்து …

அதிகாரத்தை கைப்பற்றுவோம்!

மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை. மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் கூறுகிறார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தனக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். உச்சநீதிமன்றமோ பீட்டாவின் அரவணைப்பில் கிடக்கிறது. அங்கு தமிழக மக்களுக்கு ஒருபோதும் நீதி நியாயம் கிடைக்காது. அப்படியென்றால் என்னதான் வழி? தமிழக மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை எடுப்பதுதான் ஒரே வழி. தமிழக மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் ஒரே …

இந்த தாய்கள் இருக்கும்வரை…

•தாய்! “தாய்” என்ற ரஸ்சிய நாவலில் வரும் அம்மாவை யாரும் மறக்க முடியாது. தன் மகனின் போராட்டத்திற்கு அவர் செய்யும் உதவிகள் அதில் சிறப்பாக சொல்லப்பட்டது. அதேபோல் ஈழத்திலும் பல தாய்மார்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்கள் போராளிகளுக்கு செய்த உதவிகள் மறக்க முடியாதவை. 1984ல் ராணுவ சுற்றிவளைப்பிற்கு அஞ்சி நானும் தோழர்களும் கரவெட்டி சோனப்பு வயல் வெளியில் பதுங்கியிருந்தபோது ராணுவத்திற்கு தெரியாமல் சோறு கொண்டு வநது தந்த நண்பன் சோதிலிங்கத்தின் தாயார் …