Archaeologist Amarnath Ramakrishna Discusses His Transfer From A Key Sangam-Era Site

In 2015, a team of archeologists from the Archeological Survey of India (ASI), a body under the culture ministry in the central government, began excavations at a coconut-tree farm at Keezhadi, near Madurai, in southern Tamil Nadu. Over the subsequent two years, the archeologists found over 5,500 artefacts. The team found upon investigation that the …

காஷ்மீரும் தமிழரும் ஒன்றுபடட்டும் !!!

•மக்கள் போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் கல் எறிந்து பீரங்கிகளை தகர்ப்பார்கள் – பிடல் காஸ்ரோ உலகில் நான்காவது மிகப் பெரிய ராணுவம் இந்திய ராணுவம் என்கிறார்கள். அந்த இந்திய ராணுவத்தை காஸ்மீர் மாணவிகள் கல் எறிந்து விரட்டியுள்ளார்கள். ஆம். மக்கள் போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் அது பாலஸ்தீனமாக இருந்தாலும் சரி அல்லது காஸ்மீராக இருந்தாலும் சரி எந்த பெரிய ராணுவம் முன் நின்றாலும் அஞ்ச மாட்டார்கள். கல்லால் எறிந்தே விரட்டியடிப்பார்கள். பாலஸ்தீனத்தில் சிறுவர்கள் இஸ்ரேலிய …

கேரள அரசு,மலையாளிகளை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்!

“பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையென்றால், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்டங்களில் வாழும் மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரக்கூடாது என்ற முடிவோடு, பவானி ஆற்றில் கேரள அரசு கட்டி ஆறு தடுப்பணைகள் கட்டி வருகிறது. கேரள மாநிலம் – தேக்குவட்டையில் கட்டப்பட்டு வந்த தடுப்பணையை, 17.02.2017 …

நூற்றாண்டில் ஹைக்கூ பறவைகள்…

மு.முருகேஷ்: பூமியின் வயதென்ன..? யாராலும் இன்னும் சரியான பதிலைக் கண்டடைய முடியாத சிக்கலான கேள்வியிது. பல்வேறு வகை ஆராய்ச்சிகளின் மூலமாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பூமியின் வயதை இன்னமும் கணித்துக்கொண்டே இருக்கிறார்கள். பூமி தோன்றி கிட்டத்தட்ட 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்கின்றனர் ஒரு சாரர். ‘இல்லை… இல்லை… 500 கோடி ஆண்டுகளுக்கும் அதிகம்…’ என்கின்றனர் இன்னொரு சாரர். எப்படியோ, பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இப்பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நமக்குப் பெருமையே. இவ்வளவு …

தமிழ் சிறுகதை நூற்றாண்டு!

  19  ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கா,பிரான்ஸ்,ரஷியா போன்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம் வளர்ந்தபோதிலும், இந்தியாவில், தமிழ்நாட்டில், சிறுகதை என்று சொன்னால், அது வ.வே.சு.அய்யரின் ” குளத்தங்கரை அரசமரம் ” கதையைத்தான் சொல்ல முடியும். 1917  இல் அவரது ” மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் ” என்ற தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்பே தமிழில் வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள், பாரதியாரின் ” ஆறில் ஒரு பங்கு ” என்றொரு சிறுகதை, செல்வகேசவ …

தமிழ் சினிமாவிற்கு வயது நூறு துள்ளி ஓடுகிறதா? தள்ளாடுகிறாதா?

உலக அளவில் பேசப்படுகிற, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிராந்திய மொழித் திரைப்படங்களில் தமிழ் திரைப்படங்களுக்கென தனி இடம் உண்டு. தென்னிந்திய மொழி ( தமிழ், தெலுங்கு, கன்னடம்,) திரைப்படங்களின் படபிடிப்பிற்கு சென்னை தான் மைய தளமாக இருந்து வந்துள்ளது. அதனால் தான் திரைப்படத்துறையின் 24 துறை சங்கங்களும் இன்று வரை சென்னையில் தான் இயங்கி வருகின்றன. ஆசியாவிலேயே பெரிய ஸ்டியோவாக இயங்கி வந்த வாஹினி ஸ்டுடியோ (11 தளங்கள்) ஜெமினி, மெஜஸ்டிக் நியூடோன், சியாமளா, அருணாசலம், மற்றும் ஏ.வி.எம் …

சமரச முயற்சிகள் தோல்வி, சொந்த மண்ணை மீட்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாப்புலவு மக்கள் !!

முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு முடியாது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு விமானப்படை தளபதியும் கூறியுள்ளனர் இதனை கேட்ட கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் இரண்டாவது பிரதான வாயில் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். தமது காணிகளை தம்மிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பிலவுக்குடியிருப்பு கிராம மக்களை மாவட்ட அரச அதிபர் ரூபவதி …

‘எனக்காகப் பேசி மற்றவர்களின் விடுதலை பாதிக்கக்கூடாது!’ கலங்கிய பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் பேரறிவாளன்  உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசத்தை அனுபவித்துவருகிறார்கள். அவர்களுடைய விடுதலை தொடர்பாக சட்டப்போராட்டம் நடந்து வந்த நிலையில், ‘அவர்களின் விடுதலையை அந்த மாநில அரசே முடிவு செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏழு பேரின் விடுதலையை உறுதிசெய்து 2014-ல் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.மேலும், ‘‘இதுகுறித்து மத்திய …

மக்கள் அவதியில். காளி கோவில் தான் கேடா?

ஒரு வருடத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவேன் என தேர்தலில் வாக்குறுதியளித்திருந்தார் தலைவர் சம்பந்தர் அய்யா. தமிழ் மக்களும் அவரது வாக்குறுதியை நம்பி அவருக்கு வாக்களித்து வெற்;றி பெற வைத்தனர். வெற்றி பெற்ற சம்பந்தர் அய்யா எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொண்டார். ஆனால் வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. ஒரு வருடத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாறாக சம்பந்தர் அய்யாவுக்கு பதவியும் சொகுசு பங்களாவும் கிடைத்துள்ளது. கடந்தவாரம் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் …

2016 முடிந்து,2017ல் துவங்கிய தமிழ் தேசிய இனப் பயணம் !

  2017 துவக்கத்திலேயே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம்.மன்னிக்கவும், தற்கொலை ! எனும் பெருஞ்செய்தியே நம்மை வரவேற்கிறது.மராட்டியம்,தெலுங்கானம் போன்ற பகுதிகளில் கேள்விப்படும் செய்தி இன்று தமிழகத்தில் இயல்பான செய்தியாக உருவாகி வருகிறது.மளிகை கடைகளிலோ அல்லது ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் அரிசி விளைகிறது எனக் கூறும் இளைய தலைமுறை உருவாகி வருகிறது.வி கே சசிகலா தமிழகத்தின் முதல்வராக இன்னும் சில நாட்களில் பொறுப்பேற்க உள்ளார்.தமிழ்த் தேசிய இனம் எந்த அரசியல் கட்டத்தில் இருக்கிறது என்பதை துளி கூட அறியாதவர்,அறிந்து …