home பரிணாமம் மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுக்காப்பைக் குறித்து கஸ்தூரி ரங்கன், கார்கில் தலைமையில் குழு அமைக்கப்பட்டன. குஜராத்தில் 449 சதுர கி.மீட்டரும், மகாராஷ்டராவில் 17,340 சதுர.கி.மீட்டரும், கோவாவில் 1461 சதுர கி.மீட்டரும், கர்நாடகத்தில் 20,668 சதுர.கி.மீட்டரும், கேரளாவில் 9993 சதுர கி.மீட்டரும், தமிழகத்தில் 6914 சதுர கி.மீட்டரும் மேற்தொடர்ச்சி மலை பசுமைப் பாதுகாப்பில் அடங்கிய பகுதி என கண்டறியப்பட்டன. ஆனால், தமிழக அரசு இதைக் குறித்தான தனது கருத்தை இதுவரை மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கின்றது.
2015 செப்டம்ரிலே இதுக் குறித்தான தனது நிலைப்பாட்டை தமிழக அரசு மத்திய அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச் சூழலைக் குறித்து மத்திய அரசு தமிழக அரசிடம், விவரங்களை கேட்டும் அனுப்பாதது கண்டத்துக்குரிய செய்தியாகும்.
மற்ற மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உரிய நேரத்தில், தங்களுடைய கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை 135 கிராமங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஓரத்தில், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது.
இதைக் குறித்து மாநில அரசு என்ன செய்ய போகின்றது என்பதை தெரிவிக்க வேண்டிய கடமையை புறந்தள்ளுவது நியாயமற்ற நடவடிக்கையாகும். உடனே இதுக் குறித்தான கருத்துக்களை மத்திய அரசுக்கு கால தாமதிக்காமல், தெரிவிக்க வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06.03.2017

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply