home நிகழ்வாழ்வு சென்னையில் மார்கழி மாதத்தில் வீதி விருது விழா…!

சென்னையில் மார்கழி மாதத்தில் வீதி விருது விழா…!

9/1/2016
‘சென்னையில் மார்கழி மாதத்தில் திருவையாறு’ என தமிழர்களை புறக்கணித்து “ஒரு கலை விழா (பாட்டுக்கச்சேரி )” எனும் பெயரில் தமிழர்களை புறக்கணிக்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.தமிழ் மண்ணிற்க்கான கலைகளை கலைஞர்களை கொண்டாடும் திருவிழாவாக மாற்று ஊடக நடுவம் ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கொண்டாடியது.தொடர்ந்து 4 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வீதி விருது  விழா நேரத்தில் 3000 கலைஞர்கள் பங்கெடுக்கிறார்கள். புதிய நாட்டுப்புற கலைகளை மேடையேற்றுவதும் ஒவ்வொரு முறையும் 100 மூத்த நாட்டுப்புறக்கலைஞர்களையும் கௌரவப்படுத்துகின்றனர்.   கடந்த 15 வருடங்களாக  நாட்டுப்புறக்கலைகளை கண்டறிந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தலைவர்களிடம் உரையாடி, பயிற்சியளித்து அதனை ஒவ்வொரு முறையும் மேடையேற்றி வருகின்றனர்.இது போன்ற தமிழருக்கான விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் எழுச்சியோடு நிகழ வேண்டும் !

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply