home களம் உச்சநீதிமன்றமும் சல்லிக்கட்டுக்கு எதிரானதே ! பீட்டாவின் பினாமிகளே !!

உச்சநீதிமன்றமும் சல்லிக்கட்டுக்கு எதிரானதே ! பீட்டாவின் பினாமிகளே !!

#சல்லிக்கட்டு மல்லுக்கட்டு

உச்சநீதிமன்றத்தில் சல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் #பீட்டாவிற்கு ஆதரவாக ஐம்பதுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். அவர்களது வழக்கறிஞர் விவாதத்தை முன்வைத்து பேசிய பொழுது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நீதிபதிகள்! நம் தரப்பு வழக்கறிஞர் பேச ஆரம்பித்தவுடன் அதிகப்படியான குறுக்கீடுகள் மட்டுமின்றி இடை இடையே நம் வாதங்களுக்கு நக்கலடித்து சிரித்து பீட்டாவினரையும் சிரிக்க வைத்தனர். என்னைப் போன்றோர் இதை சகித்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு எங்கள் கையாளாகாத தனத்தை எண்ணி வருந்திக்கொண்டிருந்தோம்.

இமயம் சரவணன் ( தமிழர் முன்னணி )
தில்லியில் நான்கு நாட்களாக மையமிட்டு நாம் சந்தித்து வரும் சந்திப்புக்கள் ஒரு சம்பிரதாயமானதே.
அதோடு ஐயா.ராசசேகர் (சல்லிக்கட்டு பேரவை தலைவர்) அவர்கள் அழைப்பையும் புறக்கணிக்காமல் சந்தித்து வருகிறோம், காரணம் இவர் தொடர்ச்சியாக தடை நீங்க பல்வேறு வழக்குகள் தொடுத்து போராடி கொண்டிருக்கிறார், இன்னும் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் சந்தித்தில் ஒன்று மட்டும் நமக்கு தெளிவாக புரிந்தது. அதாவது உறுப்பினர்கள் சல்லிக்கட்டு விடயத்தில் முனைப்பாக இருந்தாலும் அதிமுக தலைமை அவர்களை இன்னும் சரிவர முடுக்கிவிடவில்லை.

திமுகவின்
நிலைப்பாடு என்னவென்றால் இத்தடை நீடித்தால் தமிழக ஆளுங்கட்சி மீது மக்கள் வெறுப்படைவார்கள் அதன் மூலம் நாம் அரசியல் செய்யலாம் என்ற உள்நோக்கு.

மற்ற கட்சிகள், இவ்விடங்களில் எவ்விதமான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். அப்படியே ஆர்வம் காட்டினாலும் அவர்களது உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்பதுவும் வேதனையே., எல்லாவற்றிற்கும் மேலாக பா.ச.க வினரை சந்தித்த சந்திப்புகள் என்பது எந்தவித பயனையும் தரப்போவதில்லை.

நமக்கு அதில் துளியளவும் உடன்பாடும் இல்லை என்ற போதிலும் சல்லிக்கட்டுக்காக மட்டுமே போராட முனைந்திருப்பவர்கள் இந்திய ஒன்றியத்தின் சூழ்ச்சி அறிந்திடாதவர்கள் கள்ளம் கபடமற்ற நம் கிராம பகுதி மக்கள் அவர்களின் வற்புறுத்தலும் காரணம் என்பது ஒரு வேதனையான விடயமே.! இதில் காங்கிரசையும்,பாசக வையும் நாம் வேறுபடுத்திப்பார்க்க முடியாது.
ஆயிரம்தான் சொன்னாலும் அதை ஏற்க மனம் மறுக்கிறது. . .
எவ்வளவு திறமையான வழக்கறிஞர் என்பது முக்கியமல்ல, என் பண்பாடோடு ஒன்றிப்போன ஒருவராக இருந்தால் மட்டுமே சல்லிக்கட்டுக்கான வழக்கில் தெளிவான வாதங்களை முன்வைக்க முடியும்.
நீதிமன்றமும் நமக்கு எதிரானதே!
பீட்டாவின் பினாமிகளை!!

அப்படியென்றால் நாம் என்ன செய்வது????
என்ன செய்வது என்று கேட்டால் ஒரே நிலைப்பாடுதான். . . .
தடை மீறுவது. . . . .
(தடை உடைத்து பண்பாட்டை மீட்டெடுக்க நம் தமிழர்கள் தயாராவதைத் தவிர நாம் செய்யும் காரியங்கள் யாவும் இடைப்பட்ட முயற்சியே! தமிழர்கள் இந்தியத்தின் சூழ்ச்சி உணர்ந்து,நம் பண்பாட்டின் மீது தொடுக்கபட்டுள்ள போரை வெற்றிகொள்ள ஓர் அணியில் திரளவேண்டும். . . . )

fb_img_1480914895403

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply