home பரிணாமம் மறுதிருமணம் மகா குற்றமா என்ன?!

மறுதிருமணம் மகா குற்றமா என்ன?!

மணமுறிவும்,மறு திருமணமும்-தனி மனித வாழ்வில் மிக சாதாரணமான இயல்பான நிகழ்வு!
முதல் மனைவியிடம் மண முறிவு பெற்றுள்ளார்.இரண்டாவது மனைவி இறந்துவிடுகிறார்.தற்போது மறுதிருமணம் செய்திருக்கிறார்.இதை வைத்துக் கொண்டு ஒரு தனி மனிதனை எப்படி விமர்சனம் செய்ய இயலும்?என்ன தேவை இருக்கிறது?இதன் ஊடாக “தன்னை யோக்கியனாக” காட்டும் மனநிலை எவ்வளவு மட்டமானது?எவ்வளவு வக்கிரத்தன்மையுடையது?

அதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும்,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு.அன்வர் ராஜா அவர்கள் தற்போது மூன்றாவது திருமணம் செய்திருக்கிறார்.FB_IMG_1468311947751இதில் இவருடைய மதத்தை கேள்விக்குள்ளாக்குவதில் என்ன அறம் இருக்க முடியும்?அதிமுக மீது கொள்கை மற்றும் அரசியல் செயல்பாடுகள் ரீதியாக குற்றச்சாட்டுகள் வைக்க ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது,அவற்றை கேள்வி கேட்க துணிவில்லாத அற்ப பதர்கள் இவரின் மண முடிவை கேலிக்குள்ளாக்குவதில் என்ன தகுதி இருக்கிறது?குறிப்பாக இந்த முகநூல் போராளிகள் பற்றிக் குறிப்பிட்டே ஆகனும்.likeஅல்லது share செய்தாலே தனது சமூக பங்களிப்பு முடிந்து விட்டதாக நினைக்கும் இந்த போராளிகள் யார்?ஒரு பெண்ணின் பெயரில் உலவும் fake போலி முகநூல் கணக்கிற்கு like அள்ளித் தெளிப்பவர்கள் இந்த போராளிகள் .முகநூலில் ஆபாச படங்களை தேடி அல்ப சுகம் அடைபவர்கள் இந்த போராளிகள்!மனைவிக்கு/கணவனுக்கு தெரியாமல் 24/7 நேரமும் முகநூலில் மற்றவர்களிடம் வழிந்து கொண்டு இருக்கும் வெங்காய போராளிகள்!அலுவலக நேரத்தில் கடலைப் போட்டுக் கொண்டு இருக்கும் “கடமை போராளிகள்”!அடுத்தவன் வீட்டு படுக்கைஅறையை எட்டிப் பார்த்து Status போடும் இழிபிறவிகள் தான் இந்த போராளிகள்!1938ல் பெரியார் ,” ஐந்தாண்டிற்கு ஒருமுறை திருமணப் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் ” என்று அப்போதே கூறியுள்ளார்.தமிழகத்தில் 50ஆண்டுகளாக பெரியாரின் பெயரை வைத்து அரசியல் அதிகாரத்தில் திளைக்கும் கட்சிகள் பகுத்தறிவு சிந்தனைக் கூட தமிழர்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.அடுத்த மனிதனின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது தன்மானமற்ற ஈனத்தனமான செயல் எனும் அடிப்படை அறத்தைக் கூட கொண்டு போய் சேர்க்கவில்லை. மாறாக தினமும் ஊடகங்களில் “4கள்ள காதல்-கொலை” எனும் அறுவறுப்பான செய்திகளைத் தான் இந்த கருணாநிதி-ஜெயலலிதா போன்ற திராவிட ஆளுமைகள் அறுவடையாக கொடுத்துள்ளனர்.மக்களை உணர்ச்சிவசமான நிலையிலேயே எப்போதும் இவர்கள் வைத்துள்ளனர்.மக்கள் மட்டுமல்ல;
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கும் நடிகை.பத்மினி அவர்களுக்கும் இடையேயான உறவு பற்றி பத்திரிக்கையாளர்கள் வினவிய போது,”நான் முற்றும் துறந்த முனிவனல்ல;அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல”என்றே பதிலளித்தார்.imagesநடிகை.ஜெயலலிதா, சோபன் பாபு அவர்களோடு live in உறவுமுறையில் இருந்துவந்தார்.அந்த காலகட்டத்திலேயே அதை பகிரகங்கமாகவும் அறிவித்தவர்.ஆனால் அவர் அதிமுக மூலம் அரசியலுக்கு வரும் வேளையில் ஜெயலலிதாவின் தனிமனித செயல்பாடுகளாலேயே விமர்சிக்கப்பட்டார் !இன்று இருக்கும் அரசியல் தலைவர்களும் இது போன்ற சாடல்களுக்கு விதிவிலக்கல்ல;
சமூக இயக்கங்கள் தான் மக்களை பண்படுத்த இயலும்,சமூக இயக்கங்களுக்கு இந்த கடமை கூடுதலாக உள்ளது.இன்றைக்கு நம்மிடம் இருக்கும் சமூக இயக்கங்கள் மத வெறியைத் தூண்டவும்,சாதி வெறியைத் தூண்டவுமே இயங்குகின்றன.இந்த நவீன நூற்றாண்டில் கூட காதல் திருமணங்கள் ,”ஆணவக் கொலைகளில்”தான் முடிகிறது.இதே வேளையில் அற்ப காரணங்களுக்காக மண முறிவு நிகழ்கிறது என்பதையும் மறைக்க கூடாது.சமூக சீர்திருத்தம் அல்லது சமூக மேம்பாடு என்பது இயக்கங்களின் பகுத்தறிவில் பிறக்கிறது.உலகமயமாக்கல் சூழலில் கூட ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி முத்தம் கொடுப்பதையே மாபெரும் குற்றமாக பார்க்கும் பிற்போக்குத் தனத்தில் தான் தமிழகம் இன்னமும் இருக்கிறதா?உண்மையும்,காதலும் ஒருவரையொருவர் இணைத்து வைக்க இயலும்;பரஸ்பரம் இவ்வுணர்வு இயலாத அல்லது இல்லாத போது மணமுறிவும் மறுதிருமணமும் இயல்பானதே!IMG-20160712-WA0006இவ்வாறான படிப்பினைகளை உள்வாங்கிக் கொண்டு காதல்,திருமணம்,குடும்பம்,சமூகம் போன்ற அமைப்புகளை வலுப்படுத்துவதே இயக்கங்களின் கடமைஆக இருக்க வேண்டும்.குறிப்பாக இன்று தமிழகத்தில் மேலெழுந்துள்ள தமிழ்தேசிய இயக்கவாதிகளின் பொறுப்பு.தமிழ்த்தேசிய சிந்தனையை உள்வாங்கிக் கொண்டுவரும் எளிய இளைஞனாக மணமுறிவு-மறுதிருமணம் போன்றவற்றில் சில கேள்விகளை எழுப்பியுள்ளேன்.மூன்றாவது திருமணம் செய்துள்ள திரு.அன்வர் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

-பா.ஜோ பிரிட்டோ

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply