home சமீபத்திய பதிவுகள் ஆரோக்கிய உணவிற்கு அழைக்கும் பெண்மணி!

ஆரோக்கிய உணவிற்கு அழைக்கும் பெண்மணி!

ஆரோக்கிய உணவிற்கு அழைக்கும் பெண்மணி!
1.கருப்பட்டி ஜிலேபி
2.கருப்பட்டி அல்வா
3.திரிகடுகம் கடலை மிட்டாய்
4.திரிகடுகம் கம்பு மிட்டாய்IMG_20160618_163807
5.சீரகசம்பா அதிரசம்
6.கருப்பட்டி கம்பு சீடை
7.கேள்வரகு மிக்சர்
8.சாமை முருக்குசேவு
9.குதிரைவாலி சீவல்
10.வரகு காரசேவு
11.கேள்வரகு முடக்கத்தான் பக்கோடா
12.மலைத் தேன்

அப்புறம் காலை இரவு சிற்றுண்டியாக…
1)சிவப்பருசி நீர் தோசை
2)கம்பு தோசை
3)கம்பு இட்லி
4)கம்பு பணியாரம்amuthu1 amuthu2
5)ராகி தோசை
6)சோளப் பணியாரம்
7)சோள தோசை
8)சோள இட்லி
9)சாமை வெண்பொங்கல்
10)குதிரைவாலி வெண்பொங்கல்
11)திணை வெண்பொங்கல்
12)பீட்ரூட் சப்பாத்தி
13)கேரட் சப்பாத்தி
14)வெந்தயகீரை சப்பாத்தி
15)சப்பாத்தி
16)கம்பு ராகி சோள தோசை
17)கம்பு ராகி சோள இட்லி
18)சாமை அரிசி எலுமிச்சை சந்தகை
19)குதிரைவாலி அரிசி இடியாப்பம்
20)சம்பா ரவை உப்புமா
20)சம்பா ரவை கிச்சடி
21)அவல் இனிப்பு உப்புமாamuthu
22)அவல் உப்புமா
23)முளைகட்டிய பயறு சோள கலவை
24)ராகி அடை
25)ராகி ரொட்டி
இன்னும் பல வகை காலை இரவு உணவுகள். ஒரு மாதத்தில் உணவுகள் ஒரு முறை கூட மீண்டும் தரபடாமல் தரமாக பார்த்து பார்த்து நேர்த்தியாக சமைத்து தாராங்க…
அட யாருப்பா இவங்க எனக் கேட்கத் தோனுதா…

IMG_20160618_171321

வணிகவியலிலும் சட்டவியலிலும் பட்டம் பெற்று,அடக்க செலவியலில் உயர்தகுதி பெற்று( B com,BL -ICWA) ஒரு பெருங்குழுமத்தில் கணக்காளராக பணிபுரியும் சுதா காந்தி அவர்கள்!

 • “மரபு வழி உணவு மீட்பு;
  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்;
  உணவே மருந்து… ” எனும் பெரும்கனவைத் தேடி அமுது விருந்தோம்பல் சேவை எனும் தடத்தில் பயணிக்கும் சுதா அவர்களை சந்தித்தோம்.
  “இயற்கை உணவு வகை,சிறுதானிய உணவு வகைகளுக்கு முதன்மை தருவதை-உடல் நலனிலும்,சமூக நலனிலும் அக்கறை கொண்ட மருத்துவர்களும்,பசுமை ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர்.அதன் செயல் வடிவமே “அமுது விருந்தோம்பல்”.செக்கில் ஆட்டிய எண்ணெய் முதல் இயற்கையான தென்னங்கருப்பட்டி ,நாட்டுக் கரும்புச் சர்க்கரை என ஒவ்வொன்றாக தேடிப்பிடித்து நேர்மை தவறாது சமைத்து அளிக்கிறோம்.சுக்கு சுவைநீர் தொடங்கி…பல்வேறு வகையான காலை,இரவு சிற்றுண்டிகள்…ஒரே மாதத்தில் 40வகை கீரைகள்…கைக்குத்தல் அரிசி உள்ளிட்ட சிறுதானிய அரிசிகள் தருவதை உறுதி செய்திருக்கிறோம்.,
  ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான துவையல்,குழம்பு,பொறியல் எனத் தருகிறோம்.நம் வீட்டில் அம்மா சமைப்பது போல.
  வெள்ளைச் சர்க்கரை,வெள்ளைச் சோறு,கடை எண்ணெய் போன்ற உடலுக்கு கேடு தரும் எவற்றிற்குமே இடமில்லை.

1.தினமும் எங்களிடம் பலர் வந்தும் சாப்பிடுகின்றனர்,எடுத்து கொண்டும் செல்கின்றனர்.
2.எண்ணிக்கையை பொறுத்து நாங்களே தினமும் அவர்களிடத்திற்கு சென்றும் கொடுக்கிறோம்.
3.திருமணத்திற்கும்,சிறப்பான குடும்ப விழாக்களுக்கும் சமைத்தும் கொடுக்கிறோம்.
4.குடும்பத்திற்கு சிறப்பு விருந்துண்ணலும் ஏற்பாடு செய்கிறோம்.
5.இயற்கை முறையில் விளைந்த சிறுதானியங்கள்,அரிசி வகைகள் மற்றும் மளிகை பொருட்கள் முன்பதிவு செய்பவர்களுக்கும் கொடுக்கிறோம்.

IMG_20160618_155540

“எம் குழந்தைகள் பால் உள்ள அக்கறை ,எம் மக்கள் மீதும்” என்று அக்கறையோடு பேச்சை சுருக்கமாக முடித்து அமுது விருந்தோம்பல் சேவைப் பணியை தொடர்ந்தார்.அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.
தொடர்புக்கு:
தி.சுதா காந்தி
அமுது(விருந்தோம்பல் சேவை)
2/171வேளச்சேரி முதன்மை சாலை,
காந்தி சாலை சந்திப்பு அருகில்,
வேளச்சேரி,
சென்னை-42.
(+91-9578956668)
நேர்காணல்:பா.ஜோ பிரிட்டோ.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply